Sunday, January 21, 2007

ராம் பாகம்-2

திரும்பியவன் கண்ணில் பட்டதோ மாடர்ன் பிகர்ஸ் எல்லாம் ஜீனஸ் டீ-சர்ட் தான். அட என்ன கிரகம்டா இது, நம்ம ஊர் பொண்ணுங்க மாதிரி வருமா , ஒரு பாவாடை தாவணி போட்டு , ஒரு மொழம் மல்லிய வெச்சு. "சென்னைக்கு தெரியுமா மதுரை மல்லி வாசம் "என்று முனு முனுத்தபடியே விடுதி வந்தடைந்தான். அவன் வருத்தத்தில் உள்ள நியாயத்தை உணர இதோ



மெஸ் செல்ல எல்லோரும் தயார் ஆக, உடன் சென்றான ராம். அனைவருக்கும் சப்பாத்தி இருந்தது (வரண்ட நிலையில்) சாப்பிட அரம்பித்தான்."டேய் இப்ப தெரியுதா அம்மா சமயலோட அருமைய " என்று உள்ளுக்குள் யாரோ குமுறுவதை உணர்ந்தான்.சுத்தி அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் இருந்து அவர்களின் குமுறுதலை உணர முடிந்தது. "எலே என்ன லே இது சப்பாத்தி பிக்கவே முடியல" என்றான் அல்வா ஊரிலிருந்து வந்த தோனி.

மறுநாள் விடிந்தது,காலை குளிக்க பெரிய வரிசை,திடீர் என்று ஒரு அவளக்குரல் "மாப்ளா தண்ணி நின்னுடுச்சு".காலை ஒரு மணி நேரம் தான் தண்ணீர் வருமாம்.அடுத்து என்ன பக்கத்தில் இருந்த அடி குழாயில் தண்ணீர் அடித்து கொண்டு வந்து குளித்தான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் போது குளிக்காமல் போக முடியுமா??? தன்னுடன் 4 வருடம் பயில உள்ள நண்பர்களை காண அவலாய் இருந்தான்.அட தோனி நம்ம வகுப்புதான்,"ஹய் ஐ ஆம் ராம்,நம்ம ஊரு மதுரை" என்று அரம்பித்தான்."எலே மதுரையா நான் தோனி நம்ம ஊரு திருநெல்வவேலி" என்று கைகுலுக்கினர்.

ஆசிரியர் மதிப்பெண் போடுவதற்கு முன் இவர்கள் சேர்ந்து மாண்புமிகு மாணவிகளை மதிப்பிட அரம்பித்தனர்.

"டெய் மாப்ள,என்னடா இது நம்ம கிலாஸ்ல மட்டும் எல்லாம் அட்டு பிகரா இருக்கு "

"எலே அதுதான் நாம வாங்கி வந்த வரம், நான் ஸ்கூல தான் இப்படி, காலேஜ்ல எல்லாம் நல்லதா இருக்கணும்னு நல்ல வேண்டிக்கிட்டுதான் வந்தேன்.எங்க அப்பா ECE அல்லது CS எடுக்க சொன்னார் நான் தான் IT னு ஒத்த காலுல நின்னேன் "

"மாப்ளா கவலை படாதட , என்ன தான் உடம்புல எண்ணேய்ய ஓற்றி உருண்டாலும் உடம்புல ஒட்டரது தான் ஒட்டும்"
இப்படியே ராமின் வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்ந்தது. நம்ம பசங்க வாழ்க்கையில இன்பம்,துன்பம்,சிரிப்பு,அழுகை,தொந்தரவு,பகல் கனவு அகிய பல்சுவைகளும் ஒரு பொண்ணு நுழைஞ்சா தானே வரும். எத்தனையோ வாய்ப்பு அமைந்தும் "காதல்னா உணர பட வேண்டும், அதுவா நடக்கணும்" என்று எகத்தாலம் பேசியே மூன்று ஆண்டு முடிந்தது .

நான்காம் ஆண்டு தன் கல்லூரிக்கு இணைதளம் அமைக்கும் பொறுப்பை ராமு ஏற்றான்.அதற்காக தனது கை பேசியிலிருந்து குறுஞ்சொற்கள்(SMS) அனுப்பினான்.அதில் ஒரு எண் கதாநாயகியின் எண் என்பதை அவன் உணரவில்லை. அடுத்த நாள் இரவு ஒன்பதரை மணியளவில் ராமுவின் கைபேசி சினுங்கியது.

"ஹலோ" என்றான்

"
ஹலோ , திஸ் இஸ் தாண்யா . மே ஐ நோ ஊ இஸ் திஸ்"

தொடரும்...

Friday, December 15, 2006

ராம். பாகம் - 1

ரம்யமான காலைப் பொழுது சென்னை வந்தடைந்தது மதுரை ராதா, "டேய் ராம் எழுந்திரு டா எக்மோர் வந்துருச்சு" வழக்கம் போல் அன்றும் அலாரம் ஆகிவிட்ட அப்பா,சளிப்புடன் எழுந்தான் ராம்.

நேரம் ஆறு ,எட்டு மணியளவில் கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும்.வழக்கம் போல் பொறியியல் கல்லூரி தான் , தமிழ்நாட்டில் ஒன்னாவதுக்கு அடுத்து ரெண்டாவது என்பது போல 12க்கு அடுத்து பொறியியல் என்பது எழுதபடாத சட்டம்.

எழும்பூரிலிருந்து கிண்டிக்கு விரைந்தது ஆட்டோ ரிக்ஷா. ஆட்டோவின் வேகத்தைவிட வேகமாக நகர்ந்தது ஆட்டோ மீட்டர்.ராம் ஒரு குட்டி தூக்கம் போட மீட்டரை கவனித்தபடி வந்தார் மிடில் கிளாஸ் அப்பா."சார் காலேசு வந்துடுச்சு,மெயின் கேட்டா சைடு கேட்டா " வினவினான் ஆட்டோ ஓட்டுனர்."எங்கயாவது நிருத்துப்பா போதும் " மகனின் கல்லூரியை பார்க்க ஆவல் இருக்காதா என்ன.

செங்கோட்டை போல் காட்சி அளித்தது அந்த கல்லூரி.

"அப்பா காலேஜ் எப்படி இருக்கு"

"சூப்பரா இருக்குட எங்களுக்குத்தான் இப்படி காலேஜ் எல்லாம் போய் படிக்க வாய்ப்பு இல்லாம போச்சு நீயாவது நல்ல படிக்கணும் பா"

"சரிப்பா வாங்க போலாம் அட்மிஷ்னுக்கு நேரம் ஆச்சு".

கல்லூரி சேர்ப்புக்காக குறிப்பிட்டு இருந்த கூடும் இடந்திற்கு விரைந்தனர்.

எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் (எங்கு தான் கூட்டம் இல்லை). சரி திறமையை பயன்படுத்தி முன்னாடி செல்ல முயற்சிததான் ராமு, வந்தார் ஒரு அதிகாரி "எல்லோரும் ரங்க் வரிசையில் உள்ளே வாங்க " என்றார் . 452 வது இடத்தில் நின்றான் "சே entrancela அந்த questiona correcta பண்ணி இருந்தால் 20 பேரை முந்தி இருக்கலாம் " என்று தான் செய்த பிழைகளின் விளைவை எண்ணி வருந்தினான்.

ஒரு வழியாக சேர்ப்பு முடிந்தது , "ப்ளாக் 2" 54 வது அறையின் நான்கில் ஒரு பகுதி இவனுக்கு ஒதுக்கப்பட்டது தன்னுடன் தங்கபோகும் மூவரின் குணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் லேசாக இருந்தது . அட இது தானே இனி இவர்களின் புகுந்த வீடு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்.

பலவித யோசனையுடன் தன் அறையை கண்டு பிடித்தான்,அடேய் அப்பா சென்னையின் குப்பை மண்டியாக காட்சியளித்தது அந்த அறை.பத்து ரூபாய் வாங்கி கொண்டு நாம் அறையை சுத்தம் செய்து கொடுத்தார் டேவிட் என்ற புண்ணியவன்.

மெல்ல மெல்ல முதலாம் ஆண்டு மாணவர்களின் தங்கும் விடுதி நிரம்பியது , பல திருநெல்வேலி அரிவாள்களின் நடுவே மதுரை வீரனாக இருந்தான் ராம்.

முதலில் கரைக்காலில் இருந்து கண்ணன் வந்தான். சிரித்தபடி வாங்க வாங்க என்று சொந்த வீட்டுக்காரன் போல வரவேற்றான் பிறகு வந்தார் ஈரோட்டில் இருந்து குமார் கணினி பயில வந்துள்ளார்.

"சரிப்ப எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்" கண்ணனும் ,குமாரும் " ஓ கே அங்கிள்" என்று கோரஸ் போட்டனர்.

"சாப்பிட்டுட்டு போகலாம் பா"

"சரிடா வா போலாம்"

கல்லூரியில் உள்ள உணவக்தில் மதிய உணவை அருந்திவிட்டு . நுழை வாயிலை நோக்கி நடந்தனர்

"தம்பி நல்ல படிக்கணும், எங்கயும் அதிகமா சுத்த கூடாது , பசங்க கூட எந்த வம்பும் வேண்டாம் , நம்ம உண்டு நம்ம படிப்பு உண்டு ன்னு இருக்கணும்பா "

"ஹ்ம்ம். ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்.. "

என்று ஹ்ம்ம்ம்.. கொட்டி கொண்டு வந்தான் ராமு. யாருக்கு தான் அறிவுரை கேட்க ஆசை. அறிவுரையின் முன்னுரை முடிந்தது.

"உடம்ப நல்ல பாத்துக்கோ , நல்ல சாப்பிடணும், மெஸ் சாப்பாடு சரி இல்லைன்னா வெளிய போய் எதாவது சாப்பிடு. நேரத்துக்கு தூங்கு உடம்ப கெடுத்துகாத " என்று அடுக்கி கொண்டே போனார் "

"ஹ்ம்ம். ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்.. " இதற்கும் வெறும் ஹ்ம்ம்ம்ம்... தான்.

பேருந்து நிறுத்தம் வந்தது , அங்கும் தொடர்ந்தது அறிவுரை மழை . பெற்ற பாசம் பிரியும் போது கண்ணில் மெல்ல நீர் வழிய மகனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டார்.பேருந்தும் வர, பேருந்தில் ஏரியபடி கை அசைதார்.

தன்னை அரியாமல் தன் கண்ணிலும் நீர் வழிய விடுதியை நோக்கி் நடந்தான் ராம்.

தொடரும்....